விண்டோஸ் போன்களுக்கான வாட்ஸ்அப் சேவை வரும் டிசம்பர் 31-ஆம் தேதி பிறகு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஆண்ட்ராய்டு 2.3.3 மற்றும் விண்டோஸ் போன் 7 இயங்குதளங்களுக்கும், கடந்த 2017-ஆம் ஆண்டு பிளாக்பெரி இயங்குதளத்துக்கும், கடந்த டிசம்பர் 2018-ஆம் ஆண்டு நோக்கியா சம்பியன் எஸ்40 இயங்குதளத்துக்கு வாட்ஸ்அப் செயலிக்கான வசதி நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, விண்டோஸ் போன்களுக்கான வாட்ஸ்அப் சேவை மற்று அப்டேட்கள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி பிறகு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த செவ்வாய் அன்று சர்வதேச விண்டோஸ் தளத்துக்கான (Universal Windows Platform - UWP) புதிய செயலியை, உருவாக்கி வருவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்த செயலி சமீபத்திய விண்டோஸ் போன் மற்றும் டெஸ்க்டாப் தளங்களில் இயங்கும் என கூறப்படுகிறது.